such a movie i seen in this year. As a engineering student i proud to be a fan of Dhanush.
A fantabulous Entertainer from the magic wand of Dhanush and Anirudh combo... Screen play is awesome with brilliant BGM and dialogue giving the goosebumps at every scene. Dhanush's acting cannot be put in words....
இப்போ நிறைய ஆன்லைன்லையே எல்லாம் வாங்க முயற்சி பண்றதுனால இந்த படத்துக்கு டிக்கெட்டும் அப்டியே வாங்கிடலாம்ன்னு நினைச்சு சைட் ஓபன் பண்ணேன். டிக்கெட் கிடைக்கல. இது ரெண்டாவது நாள் ட்ரை பண்ணதோட ஸ்டேடஸ். என் தங்கை தான் ஒரே அனத்தல். டேய் நான் வாட் எ கருவாட் சாங் கேட்டேன். அட்டகாசமா இருக்கு, என்ன படத்துக்கு கூப்பிட்டு போ அப்படின்னு சொல்லி, சாயுங்காலம் டிக்கெட் கிடைக்கல, சரி இன்னும் ஒரு தடவ ட்ரை பண்ணுவோம் அப்டின்னு சொல்லிட்டு நைட் ஷோ டிக்கெட் போட்டேன். கடவுள் புண்ணியத்துல டிக்கெட் கிடைச்சது. தியேட்டர்ல பத்து பேருக்கு கொடுத்துட்டு மீதி எல்லாம் ரிசெர்வேஷன் சொல்லிடுறான். நம்ம எப்பவுமே "ரிசெர்வேஷன்" ஜாதி ,அதுனால தியேட்டருக்கு சந்தோசமா போனோம். நான் , என் மனைவி, என் தங்கை அப்புறம் என்னோட தம்பி...
ஆரம்பத்துல இருந்தே ஒரே அமர்க்களம் தான் படம். பாட்சா மாதிரி படம் ரஜினி தான் நடிக்க முடியும்னா , VIP மாதிரி படம்லாம் தனுஷ் தான் பண்ண முடியும். அவருக்கே உரித்தான இந்த boy next door look. எல்லாமே நல்லா இருந்துச்சு. படத்துல குறை அப்டின்னு ஏதும் கிடையாது. வில்லன் அந்த பையனோட அப்பாவாவே இருந்து இருக்கலாம். இவ்ளோ மாஸ் படத்துல வில்லன் காமெடி தான் மொக்கை. பொண்ணுங்க சினிமால ரொம்ப சீக்கிரம் லவ்ல விழுந்துறாங்க . நேர்ல அப்படி ஒன்னும் நடக்க மாட்டேங்குது.
அந்த தம்பி கேரக்டர், அம்மா, அப்பா கேரக்டர் அவ்ளோ உயிர்ப்போட இருந்துச்சு. வேல்ராஜ் இதுமாதிரி இன்னும் நிறைய கதை வச்சு இருப்பார்ன்னு நம்புவோம்.
பேஸ்புக்ல போட்டா இவ்ளோ பேரு வருவானுன்களா என்ன...நானும் தான் நிறைய பேருக்கு வேலை கொடுக்க ட்ரை பண்றேன். ஒருத்தனும் வர மாட்டேன்றான். இருந்தாலும் அது படத்துல பார்க்க நல்லா இருந்துச்சு. அனிருத் இன்னும் நிறைய ஒசக்க , ஒசக்க போனும்....
சுரபி பார்ட் நல்லா இருந்துச்சு. பேமிலியோட பார்க்க நல்ல வொர்த்தான படம்.
இன்டர்வல்ல தனுஷ் இந்த சைட் பத்தி பேசிட்டுப் போனாரு, அதான் இதுல ரேவியுவ் எழுதனும்னு தோனுச்சு.
ஆல் தி பெஸ்ட் VIP தனுஷ்...இது மாதிரி இன்னும் நீங்க நிறைய படம் பண்ணனும்...