Cast: Kathir L Kavin, Reshmi Menon
Crew: Anu Charan (Director), Arul Vincent (Director of Photography), K (Music Director)
Rating: U (India)
Genres: Action, Drama, Thriller
Release Dates: 24 Sep 2015 (India)
Tamil Name: கிருமி
actual life climax was ended superbly,first half perfectly gone but below par second half....
Worth every penny, well presented movie with apt casting (charlie justified the role given to him)
புதுமுக இயக்குனர் அனுசரண் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனோடு இணைந்து கதையை உருவாக்கியிருப்பதும் , எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தை வெளியிட்டிருப்பதும் சின்ன பட்ஜெட் படம் கிருமி க்கு ஓரளவு எதிர்பார்ப்பை கொடுத்திருந்தன . படம் அதை ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம் ...
கல்யாணமாகி குழந்தை இருந்தும் வேலை வெட்டியில்லாமல் சுற்றும் கதிர்
( கதிர் ) குடும்ப நண்பரான போலீஸ் இன்பார்மர் பிரபாகர் ( சார்லி ) மூலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியனிடம் ( டேவிட் ) எடுபுடியாக சேருகிறார் . சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல கதிர் செய்யும் ஒரு செயல் அவனை புரட்டிப்போடுவதே கதை . சுருக்கமாக சொன்னால் வெட்டிப்பயல் கதிர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவமே கிருமி ...
மதயானைக்கூட்டம் மூலம் அறிமுகமான கதிர் தான் ஹீரோ . அடுத்தடுத்து அவமானப்பட்டு துனுக்கிடும் இடங்களில் கவனிக்க வைக்கிறார் . இவரது கேரக்டர் ரொம்ப கேசுவலாக இருப்பது ஒ.கே . ஆனால் அதை சுற்றி நண்பர்களுடன் அரட்டை , பாட்டு என நேரத்தை வீணடிக்காமல் கொஞ்சம் சீக்கிரமே கதைக்குள் வந்திருக்கலாமோ என தோன்றுகிறது . இந்த கேசுவல் அப்ரோச் கதிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பதட்டத்தை நமக்கு கொடுக்கவில்லை . அதனால் தானோ என்னமோ க்ளைமேக்ஸ் இயல்பாக இருந்தாலும் முழு ஈடுப்பாட்டுடன் ஓட்ட முடியவில்லை ...
சார்லி இயல்பான நடிப்பால் பிரபாகர் கேரக்டரை மேலும் மெருகேற்றியிருக்கிறார் . இவரை வைத்து இடைவேளையில் கொடுக்கும் ட்விஸ்ட் சூப்பர் . மனைவியாக ரேஷ்மி மேனன் நல்ல தேர்வு . ஆனால் இயல்பான படத்துக்கு இவர் மேக்கப் கொஞ்சம் உறுத்தல் . சீரியல் ஆர்டிஸ்டாக இருந்த டேவிட் டுக்கு இந்த படம் நல்ல வாய்ப்பு . சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . வாழ்த்துக்கள் . மாரிமுத்து , யோகிபாபு எல்லோருமே படம் என்பதை மறக்கடித்தது இயல்பாகவே வந்து போகிறார்கள். கே இசையில் பி.ஜி மிரட்டுகிறது . ஆனால் இந்த மாதிரி படத்துக்கு பாட்டு தேவையா ? அதுவும் அஞ்சு ? நிச்சயம் இயக்குனர் யோசித்திருக்க வேண்டும் . அருள் வின்சென்ட் ஒளிபதிவு இருட்டிலேயே நடக்கும் நிறைய சீன்களுக்கு வெளிச்சம் ...
புதுசான கதைக்களன் , அதற்கேற்ற டீட்டைளிங் , ரியலிஸ்டிக் அப்ரோச் , இயல்பான நடிப்பு என்று படத்திற்கு நிறைய ப்ளஸ் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் பாடல்கள் , கதிரை சுற்றியே நடக்கும் கதையில் அவனை போலவே நம்மையும் கேசுவலாக்கும் திரைக்கதை போன்ற குறைகளை " வாளை சுழட்டும் வாழ்க்கை தலை குனிந்தால் தப்பில்லை " என்று கானா பாலாவின் குரலில் வரும் ஒபனிங் சாங்குக்கு ஏற்ப நாமும் மன்னித்து விடலாம் . சினிமாத்தனம் இல்லாத நல்ல கதை இருந்தும் அதை எக்சிக்யுட் செய்த விதத்தில் கொஞ்சம் இடிப்பதால் கிருமி - ஸ்லிப் பெட்வீன் எ கப் அண்ட் லிப் ...
ஸ்கோர் கார்ட் : 42
ரேட்டிங் : 3* / 5*
Director Anucharan weaves an intricate plot of cat and mouse games and one upmanship intertwined with politics in the law and order system and its implications on the innocent common man who often becomes a pawn in these mind games played under the veil of corruption and power.
Here we have a much teased protagonist Kathir( of Madhayanaikootam fame) who is quite a wastrel in spite of his talents and is a butt of jokes among his friends and a local bunch of hooligans at a bar which encourages gambling without permit.Things begin looking up when he is mentored and encouraged by a good hearted neighbour(Charlie, reliable and subtle as ever) after a few unfortunate run ins with the bar owners and the cops.His turning into a police informer and how his entire life changes under the system for which he works sincerely even losing a close friend and almost becoming a victim of the dirty politics is what the rest of the film narrates.
The film's biggest plus is its superlative editing which helps it move at a brisk pace and keeps us interested in the proceedings.The background score, camera work and intelligent dialogue are added strengths. Performances by the entire cast are uniformly of high order.Reshmi Menon as Kathi'r wife and young mother is quite refreshing.Yogi Babu's comic interludes come as a breath of fresh air.Even the sensual moments between the lead pair can pass of as cute with their sizzling on screen chemistry.Kathir displays more confidence and underplays his role well. He cuts a striking picture with his lanky physique as he goes from stubble avtaar to a clean shaven one(vaguely resembling Vishal in some scenes).
The climax may be quite a let down for audiences fed on commercial cinema but with a crisp run time of 110 minutes, this germ(Kirumi) of a movie is well worth a view.